Friday 5 June 2015

கண்ணன்<-----> மீரா

"கண்ணன் வருவான்"
என அழுது முடிகிறது
மீராவின் அலைவரிசை

காத்திருந்தவளின் காதலுக்கு
பதிலே சொல்லாமல்
சர்ப்ப படுக்கையில்
துயலுகிறான் அனந்தன்
அல்லது
துயலுவது போல் நடிக்கிறான்

யாருக்கு தெரியும்
எல்லாம் அந்த
நாராயணனுக்கே வெளிச்சம்

கேட்கிறதா என்று
ஒருமுறையேனும் கேட்டு
தெரிந்து கொண்டப் பிறகு
மீட்ட ஆரம்பித்திருக்கலாம் மீரா

அவளின் தோடி ராகமும்
ஆதி தாளமும் அறிந்தவனா அனந்தன்
பார்த்தால் அப்படி தெரியவில்லையே
தாலாட்டு கேட்பது போல்
துயிலுகிறானே

கல்லால் சிலை செய்து
வழிப்பட்டால் என்பதற்காக
நெஞ்சமும் கல்லாகி
போனதோ அனந்தனுக்கு

மறுபடியும் கலியுகத்தில்,

தூரத்தில் ஒரு தோடி ராகம்
ஆதி தாளத்தோடு
யூகம் பல கடந்தாலும்
காதல் மாறுவதில்லை
மீரா திருந்தவே போவதில்லை

போகிற போக்கில்
கேட்டு விட்டு போகலாம் என
பார்த்தால் மீட்டுவது
மீரா அல்ல

யாரென பக்கம்
போய் பார்த்தால்
குழலோடு கண்ணன்

யாரது ? அனந்த பரமனா
அகிலத்தை மூன்றடியில்
அளந்த பரம்பொருளா
காக்கும் திருவருளா

காக்கை கூட
எட்டி பார்க்காத
இக்கானகத்தில் தனிமையில்
குழல் மீட்டுவது ஏன் ?

கலியுக குருச்சேத்திரத்தில்
வாகை சூட
அசுவமேத யாகமோ ?

குழலோசையில் போரின்
குரூரம் தெரியவில்லையே
அவளுக்குகென ஏங்கும்
ஆழ்மனவலியே தெரிகின்றனவே

இரணியின் வயிறு பிளக்க
தூண் உடைத்து வெளிவந்த
நரசிம்மனே கலியுகத்தில் கல்லாகிபோனான்
குழல் மீட்டும் கண்ணன்
தப்புவது எப்படி?

கல்லை தாண்டி நடந்த போது
மனிதம் பேசியது

எத்தனை நாள் தான்
கண்ணனுக்காக மீரா மீட்டுவது
இந்த கலியுக மகாபாரதத்திலாவது
கண்ணனும் மீட்டடுமே மீராவுக்காக
                                                                          - அவளுக்காக

Tuesday 13 January 2015

ஆசை



                      

                                         ஆசை


படுக்கையில் கண்கள் திறக்க முயலுகையில் 
அவள் நெற்றி தெறிக்க ஓர் முத்தம் பதிக்க ஆசை
பாதி போதையில் என் மார்பில் மயங்கி விழுகையில்
மீதி போதையில் கிறங்கி அணைக்க ஆசை
ஆசை முத்தம் கொடுக்க இடம் தேடுகையில்
சேலையில் சிக்கிய இடையை இரு விரலால் தீண்ட ஆசை
வெடுக்கென எனை தள்ளிவிட்டு ஒடுகையில்
கொலுசு சத்தத்திற்கு ஓர் சந்தம் அமைக்க ஆசை
குளித்து விட்டு வருவதாய் என்னை வெளியே தள்ளுகையில்
பாதி குளியலில் நானும் நனைய ஆசை
வெட்கம் உடலேறி அவள நகத்தை தின்ணுகையில்
பித்தம் தலையேறி அவள் காதருகே பிதற்ற ஆசை
அரக்கு நிற அல்லி பூவாய் அவள் சிணுங்கி விழுகையில்
அவளையே சுற்றி திரிந்து என் உலகமாய் மாற்றிட ஆசை

அடுத்த படைப்பு 
அவளுக்காக
என்றும் பித்தனாய்
அமர் (எ) ஜனனிமித்திரன்

Thursday 1 January 2015

சிறு முத்தம்



                                 சிறு முத்தம்




 31 Dec 2014,  காலை 9.55 மணி


"ஜனனி  இங்க வச்ச .ஃபைல் - ஐ பார்த்தியா" காலையில் எழுந்ததுமே அமர் சத்தமிட்டான்.

மதம் , இனம் , சாதி கடந்து பல அழுகை பார்த்து சில சிரிப்புகள் துணையோடு அரங்கேறிய திருமணம் தான் அவர்களது.

 "இந்தா வரேன்டா" ஜனணியும் பதிலுக்கு கத்தினாள் .

 இருவரின் இருபது நிமிட தேடலுக்கு பிறகு ஒருவழியாக ஃபைல் யும் கிடைத்தது.

 "அடுத்த நாள் ஆஃபீஸ் க்கு என்னலாம் தேவை னு நைட்டே எடுத்து வச்சிறகூடாது " என்ற அவள் முனகல் லும் ,

 "இந்த வீட்டில ஒண்ணு வச்சா வச்ச இடத்துல இருக்காதே " என்ற அவன் முனகல் லும் காலை பொழுது தீர்ந்த்தே போனது.

இதற்கும் அடுத்த நாள் அவர்களது திருமண நாள்.
ஆஃபீஸ் வேலையாக சென்ற அவன் வீட்டிற்கு வரவே இரவு ஆகிவிட்டது. இந்த நேரத்திற்குள் காலையில் நடந்த பிரசன்னையை அவள் சிவகாசி முழுக்க போஸ்டர் ஓட்டடாதது தான் குறை . அழுது அழுது தூக்கம் வந்தது தான் மிச்சம்.
அவளை திட்டி விட்டோம் என அவன் பல முறை வருந்தினாலும் அவன் மனசு கேட்கவேில்லை.
 தூங்கிருந்தவளை கட்டி அணைத்து அவள் கூந்தலில் முத்தமிட்டு

"காலையில ஏதோ டென்சன் -ல திட்டிடேன்- டா மன்னிச்சிருடா .வேணும் னா நீ என்னை அடிச்சுக்கோ"  என்று அவள் கையை எடுத்து கன்னத்தில் ஓங்கிய போது கை ஏனோ மெதுவாக அவன் கன்னத்தை வருடியது .

 அவள் கைகள் சற்று கீழே இறங்கி அவனை மார்போடு கட்டி அணைத்து
" போடா லூசு, நீ என்னை திட்டிட" என அவள் காதில் சொன்ன போது அவளை அறியாமலே அவள் காலில் முத்தமிட்டு மெட்டி அணிவித்தான். கல்யாணத்தின் போது அவள் கேட்ட ஒரே நகை அது தான்.

"நீ எதிர்பார்க்காத ஒரு தருணத்தில் தருவேன் என் உயிரே" என அவன் கூறியது அவள் ஞாபகத்திற்கு வந்தது.
இருவரும் காதலில் கொஞ்சம் அதிகமாகவே மூழ்கினார்கள்.

1st Jan 2015  சரியாக  12:01 மணி

 இருவரும் நெற்றியில் முத்தமிட வந்து இருவர் உதடுகளும் தெரியாமலே ஒட்டிக்கொண்டன.

 முத்தம் புத்தாண்டு நல்வாழ்த்துகள் சொல்ல வெட்கம் திருமண நாளை பறை சாற்றியது.

                                                            முதல் படைப்பு
                                                                அவளுக்காக
                                                         என்றும் பித்தன்னாய்
                                                       அமர் (எ) ஜனனிமித்திரன்