Wednesday 10 April 2019

வலி

வலி தன்னுடையது என்றான பின்பு,
அது தேவை,தேவையற்றது என்பது மற்றவர்களின் தீர்மானமாய் இருப்பது வேடிக்கையே....
                                -மித்ரன்

Wednesday 3 May 2017

கண்ணம்மா - ஊமை

"கண்ணம்மா, நிலா,தென்றல்,முத்தம்,பாரதி"
கவிதை எழுதி முடித்தான்.
அவளுக்காக அவன் செய்யும்
ஓர் ஆண்மை சமையலே கவிதை.
கண்ணம்மா, "கவிதை எப்படி டா இருக்கு?"
கேட்ட கேள்விக்கு பதில் வராமல்,அவள் குரல் கேட்காமல்
கவிதை முடியாது என அவன் நரக துழலுகிறான்.
தொலைவில் கண்ணீர் சிந்தி அவள் உடல் தேய்கிறாள்.
கண்ணம்மா ஏனோ ஊமையானாள்,
அவளின் மௌனங்கள் கேட்காத செவிடானான் பாரதி.
ஆனால் காதல் மட்டும் கண் தெரியாமல் வழிந்து ஓடியது
கண்ணம்மா முதல் பாரதி வரை..
- அவளுக்காக

கண்ணம்மா - என் காதலி

பௌர்ணமி நிலவு வெளிச்சத்தில், கடற்கரை மணலின் சுவாசத்தில்,
அவன் தோளோடு அவள் மயங்கி கொண்டிருக்கையில்,
அவளிடம் எதையோ காட்ட அவன் துடித்திருக்கையில்,
"ஏய்,கோலப்பா! நீ சின்ன வயசுல கடற்கரை மணல்-ல
கிச்சுகிச்சு தாம்பூலம் விளையாடிருக்கியா,இப்ப விளையாடலாம் வா" என அழைத்தவள்,
அவன் பதிலுக்கு காத்திராமல் மண்ணைக் கூப்பி அதுக்குள் எதையோ ஒளித்து வைத்தாள்.
"விளையாட்டுல ஜெயிச்சா என்ன கொடுக்கணும்,அத சொல்லாம  எப்படி" என்றான்.
"சரி,நான் ஜெயிச்சா நீ எனக்கு முத்தம் தா.நீ ஜெயிச்சா நான் தரேன்,சரியா! இப்ப நீ கண்டுப்பிடி" என்றாள்.
அந்த மண் குவியலில் எங்கையோ தொட்டான்.
அங்கேயிருந்த மண் விலக்கி அவன் தோற்றான் என்பதை உறுதி செய்தவள், பரிசு பெற கண்ணத்தை காட்டினாள்.
மறுமுறை குவித்தாள்,அவன் தோற்றான்,அவள் கன்னம், இவன் முத்தம்.
இன்னும் ஒருமுறை என்பது போல் மறுபடியும் தோற்றான்.
"டேய் கோலப்பா,நீ வேணும்னே தோற்கிற,உன்னை அடிப்பேன்,இப்ப நீ ஒளிச்சு வை"
எதையோ அந்த மண்ணுக்குள் அவன் ஒளித்து வைத்தான்.
அவன் விட்ட இடம் தெரிந்தவள் போல் ஒளித்ததை எடுத்தாள்,
நிலவின் ஒளி கீற்றல் அவள் கை வைத்திருந்த மெட்டியில்  பிரதிபலித்து, அவள் கண் கலங்கியதை  காட்டிக்கொடுத்தது.
"நீ ஜெயிச்சிட்ட,ஆனா பரவாயில்லை,நானே முத்தம் கொடுக்கிறேன்" என்று கண்ணீரை முத்தத்தால் துடைத்தான்
       - கண்ணம்மா முதல் பாரதி வரை கண்ணீர் வழியே முத்த நீரோடியது

கண்ணம்மா - என் கவிதை

ஆயிரம் நிலா ஒன்றாய் கூடும் வானம் ரசித்ததுண்டோ!
அரையடி தூரம் அமிலமாய் மாறி  உன்னைக் கொன்றதுண்டோ!
ஈர மண்ணில் தலைவியின் உடல் வெப்பம் உணர்ந்ததுண்டோ!
இன்று என்னும் நேற்று நாளைக்குள் காணாமல் போனதுண்டோ!
ஊமையாய் காதல் பேசும் பித்தம் தலைக்கேறியதுண்டோ!
உள்ளங்கையில் கால் மடித்து நிம்மதியாய் உறங்கியதுண்டோ!
ஏக்கமாய் உன்னை என்றும் பார்க்கும் அவள் கண்ணீர் துளிகள் சுவைத்ததுண்டோ!
எட்டு அடி எடுத்துவைத்து தனக்குள்ளேயே பேசிக்கொள்ளும் பெண்மை புரிந்ததுண்டோ!
ஓசையில்லா அவள் கண் கண்டு மௌனம் பேசியதுண்டோ!
ஒற்றை நொடி கைக்கோர்க்கும் காமம் களித்ததுண்டோ!
                  - கண்ணம்மா முதல்  பாரதி  வரை  உயிர் ஓடியது.
  

அவள் சிணுங்கல்

"கையை விடுடா,நான் ஆபீ்ஸ்குள்ள போகனும்டா,என் செல்லம்-ல" என அவள் கெஞ்ச
" அப்படியா,அப்ப ஓரு முத்தம் கொடு" என நான் கண்ணங்கள் காட்ட
கண்ணத்தில் செல்லமாய் அடித்தவள் , "உன்னை நினைச்சிட்டு இருந்தா ஆபிஸ் ல
ஓரு வேலை நடக்க மாட்டுக்குது,போ இன்னைக்கு முழுசா உன்னைப் பத்தி நினைக்க போறதில்லை"
"ஓகோ..பார்க்கலாம்" என்றவனை,
கொஞ்சம் கூட கண்டுக்கொள்ளாமல் நடக்க ஆரம்பித்தாள்.
நான்கடி எடுத்துவைத்தவள் என்னை திரும்பி பார்க்க.
நான் அவளையே பார்த்துக்கொண்டு இருப்பதை பார்த்து வெட்கம் உதிர்த்து
சிரித்துக்கொண்டே தேவதையாய் மாறி ஓடினாள்.
தேவதையாய் கண்ணம்மா மாற பாரதி எப்பவும் போல் அவளிடம் சரணடைந்தான்.
- அவளுக்காக

கடலும் அவளும்

நிலவும் கடலும் கூடும் பௌர்ணமி இரவொன்றில்,
என்னவள் அலைகளிடையில் தவழ்ந்துக் கொண்டிருக்க
அவளிடம், நிலா மறந்து நான் பித்தாக,
"கோலப்பா,நீயும் வா.." என அழைத்தவள்
கால் இடறி விழுந்து நனைந்து எழுந்தாள்
அவள் தேகத்தில் தேக்கிய நீர்த்துளி ஒவ்வொன்றும்
அவன் ஆண்மையைக் கொல்ல
நிலா வெளிச்சத்தில் காலடிச் சலங்கை சப்தத்தில்
காமம் தொடங்கி அடங்கியதே...
                                                         - அவளுக்காக

கண்ணம்மா - என் தேவதை

"தேவதையின் கண்ணாடி பிம்பமோ! அவள்"
ரசித்துப் பார்த்தவன் ரசனையைச் சொன்னால்
பைத்தியம் எனச் சொல்லி இடக் கண்ணில் எனை ரசித்து
யாருக்கும் தெரியாமல் அவள் நாணப்படுகையில்
எனக்கு மட்டுமே தெரியும் தேவதையாய் மாறிப் போகிறாள்
                                                                                                 - அவளுக்காக