Wednesday 3 May 2017

கண்ணம்மா - என் காதலி

பௌர்ணமி நிலவு வெளிச்சத்தில், கடற்கரை மணலின் சுவாசத்தில்,
அவன் தோளோடு அவள் மயங்கி கொண்டிருக்கையில்,
அவளிடம் எதையோ காட்ட அவன் துடித்திருக்கையில்,
"ஏய்,கோலப்பா! நீ சின்ன வயசுல கடற்கரை மணல்-ல
கிச்சுகிச்சு தாம்பூலம் விளையாடிருக்கியா,இப்ப விளையாடலாம் வா" என அழைத்தவள்,
அவன் பதிலுக்கு காத்திராமல் மண்ணைக் கூப்பி அதுக்குள் எதையோ ஒளித்து வைத்தாள்.
"விளையாட்டுல ஜெயிச்சா என்ன கொடுக்கணும்,அத சொல்லாம  எப்படி" என்றான்.
"சரி,நான் ஜெயிச்சா நீ எனக்கு முத்தம் தா.நீ ஜெயிச்சா நான் தரேன்,சரியா! இப்ப நீ கண்டுப்பிடி" என்றாள்.
அந்த மண் குவியலில் எங்கையோ தொட்டான்.
அங்கேயிருந்த மண் விலக்கி அவன் தோற்றான் என்பதை உறுதி செய்தவள், பரிசு பெற கண்ணத்தை காட்டினாள்.
மறுமுறை குவித்தாள்,அவன் தோற்றான்,அவள் கன்னம், இவன் முத்தம்.
இன்னும் ஒருமுறை என்பது போல் மறுபடியும் தோற்றான்.
"டேய் கோலப்பா,நீ வேணும்னே தோற்கிற,உன்னை அடிப்பேன்,இப்ப நீ ஒளிச்சு வை"
எதையோ அந்த மண்ணுக்குள் அவன் ஒளித்து வைத்தான்.
அவன் விட்ட இடம் தெரிந்தவள் போல் ஒளித்ததை எடுத்தாள்,
நிலவின் ஒளி கீற்றல் அவள் கை வைத்திருந்த மெட்டியில்  பிரதிபலித்து, அவள் கண் கலங்கியதை  காட்டிக்கொடுத்தது.
"நீ ஜெயிச்சிட்ட,ஆனா பரவாயில்லை,நானே முத்தம் கொடுக்கிறேன்" என்று கண்ணீரை முத்தத்தால் துடைத்தான்
       - கண்ணம்மா முதல் பாரதி வரை கண்ணீர் வழியே முத்த நீரோடியது

No comments:

Post a Comment